ADVERTISEMENT

உலக பொருளாதார மாநாடு  1.58 கோடி செலவு செய்த முதல்வர் தெரியுமா?

11:08 AM Apr 25, 2019 | Anonymous (not verified)

2019 ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார மாநாடு (World Economic Forum) சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள "டாவோஷ்" (DAVOS) நகரில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை மாநாடு நடைப்பெற்றது. இதில் உலகின் பல்வேறு நாட்டின் பிரதமர்கள் , தொழிலதிபர்கள் பங்கேற்றனர். அதே போல் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பங்கேற்றார். மேலும் பிரதமருடன் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு , மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட முதல்வர்களும் , தொழில் அதிபர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க எவ்வளவு செலவானது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (Right To Information) கீழ் ஒருவர் கேள்வி எழுப்பி்னார்.

ADVERTISEMENT



இதற்கு பதிலளித்துள்ள தகவல் தொடர்பு ஆணையம் சுமார் 1.58 கோடி ரூபாய் செலவானதாக தெரிவித்துள்ளது. மேலும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அவர்களுடன் , தலைமை செயலாளர் எஸ்.ஆர். மோகன்ந்தி , முதல்வரின் செயலாளர் திரு. அசோக் பர்ன்வால் , மத்திய பிரதேச தொழிற்துறை செயலர் திரு. முகமது சுலேமான் உள்ளிட்ட மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த பொருளாதார மாநாட்டில் மத்திய பிரதேச முதல்வருடன் பங்கேற்றுள்ளனர் எனவும் , விமான டிக்கெட் செலவு ,விசா செலவு ரூபாய் 30 லட்சமும் , ஹோட்டலில் தங்கியது மற்றும் அங்கு தனியாக கூட்டம் நடத்தியது இதற்கு ரூபாய் 45 லட்சமும் , டிராவல் இன்சூரன்ஸ் ரூபாய் 50,000 , மற்ற செலவுகள் ரூபாய் 15 லட்சம் உட்பட மொத்தம் ரூபாய் 1,57,85000 செலவாகியுள்ளதாக மனுதாரருக்கு தகவல் தொடர்பு ஆணையம் பதிலளித்துள்ளது.
இந்நிலையில் இத்தகைய ரூபாய் செலவுகள் குறித்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . இந்த மாநாட்டில் மூலம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிக அளவில் தொழில் நிறுவனங்கள் வரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் பயனாக மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறினார். இதே போல் அதிகாரி ஒருவர் கூறுகையில் சர்வதேச அளவில் பங்கேற்ற மாநாட்டில் இவ்வளவு ரூபாய் செலவழித்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT


பி.சந்தோஷ், சேலம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT