ADVERTISEMENT

உயிர் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம்-கேரள முதல்வருக்கு நெகிழ்ச்சியை கொடுத்த மீனவர்கள்!!

11:12 AM Aug 21, 2018 | vasanthbalakrishnan

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இந்த மீட்பு பணியில் மீட்புப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என பலரும் முழுவீச்சில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடலோர பகுதியில் இருக்கக்கூடிய மீனவர்களும் தங்களின் சொந்த படகுகள் மூலம் வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மக்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து மீட்டனர். இதை கேள்விப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் மீனவர்கள் மாநிலத்தின் ராணுவவீரர்கள் என பெருமிதப்படுத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெள்ளத்தால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்ற செய்தி பரவிய பின்னர் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலமாக கொண்டுவந்த அத்தியாவசிய பொருட்கள் வெள்ள பாதிப்பான இடங்களுக்கு அருகில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டன. பேரிடர் மீட்புக்குழு, ராணுவ வீர்கள் என தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகளில் மீனவர்களும் கரம் கோர்த்தனர். கடலோர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை தங்களின் சொந்த போட்டுகள் மூலம் மீனவர்கள் மீட்டனர்.

மீனவர்களின் இந்த ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் கேரள அரசானது மக்களை தொடர்ந்தும் மீட்டு வரும் படகுகளுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஒரு நாளைக்கு மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் அதேபோல படகுகளுக்கு ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை அரசு சரி செய்து கொடுக்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் முதல்வர் எங்களை பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது ஆனால் அந்த சன்மானம் எங்களுக்கு வேண்டாம். சொந்த மக்களை காப்பாற்றுவது என்பதும் எங்களின் கடமை உயிர் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் என நெகிழ்ச்சியுடன் பல மீனவர்கள் தங்கள் கருத்துக்களை வீடியோ மூலம் முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT