Skip to main content

இதுவரை 1026 கோடி... பொதுமக்கள் மட்டும் 4 லட்சத்து 76 ஆயிரம்பேர் நிதியுதவி...

Published on 31/08/2018 | Edited on 31/08/2018

 

pinarayi vijayan

 

 

 

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு சட்டப்பேரவை நேற்று கூட்டப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 483 பேர் இறந்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கேரளாவில் கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரளாவில் பேரிடர் பணிகளில், நிவாரண பணிகளில் உதவியர்களுக்கும் அக்கூட்டத்தில் பாராட்டுக்களை தெரிவித்தார் பினராயி விஜயன். 

 

அதை தொடர்ந்து பேசிய அவர் தற்போது கேரளாவில் வெள்ள சேதத்தை சரிசெய்ய இரண்டாம் கட்ட நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தற்போது சுமார் 305 நிவாரண முகாம்களில் 59 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

 

கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிறகு நேற்று, அதாவது வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்பபடி கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை 1026 கோடி குவிந்துள்ளது. இதுவரை பொதுமக்கள் மட்டும் 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும் வங்கி மூலமாகவும் பணம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலின் வரிசையில் வீணா விஜயன்; கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kerala CM Pinarayi Vijayan daughter filed a case against the Enforcement Directorate

கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின்  ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’  நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது

இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

இந்தியாவில் அரசாங்கத்திற்கு சொந்தமான முதல் ஓடிடி தளம் அறிமுகம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
CSpace India’s first government-owned OTT platform launched in Kerala

மலையாள திரையுலகம் தற்போது தன் மார்க்கெட்டை அதிகரித்து வருகிறது. சிறு பட்ஜெட்டில் எடுத்து பெரிய லாபத்தை ஈட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாளத்தை தாண்டி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்று, உலகம் முலுவதும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் மம்மூட்டியின் பிரமயுகம் மற்றும் ப்ரேமலு உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்த நிலையில் கேரள அரசாங்கம் சி-ஸ்பேஸ் என்ற ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைத்துள்ளார். இந்தியாவில் அரசாங்கத்திற்கு சொந்தமான முதல் ஓடிடி தளமாக இது விளங்குகிறது. 

சி-ஸ்பேஸ் ஓடிடி தளம் மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் (KSFDC) நிர்வகிக்கப்படும் எனவும், மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஓடிடி தளத்தில், 35 திரைப்படங்கள், 6 ஆவணப்படங்கள் மற்றும் 1 குறும்படம் உட்பட 42 திரைப்படங்கள் தற்போது உள்ளது. இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பது 60 நிபுணர்களைக் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க ரூ. 75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.