ADVERTISEMENT

இந்தி திணிப்பை எதிர்த்து திமுக போராட்டம்! கைது செய்த காவல்துறை! 

01:08 PM May 09, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் பிறப்பித்துள்ளார். இதற்கு தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ, பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த உத்தரவை திரும்ப வலியுறுத்தியும் புதுச்சேரி தி.மு.க சார்பில் இன்று ஜிப்மர் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.கவினர் பங்கேற்று ஜிப்மர் நிர்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தி.மு.கவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT