Trichy DMK staged a massive Struggle against the Union government

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுக்கதிமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுக்க இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

அதன்படி திருச்சியில் இன்று காலை சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் இந்தி எதிர்ப்பு, ஒரே நுழைவுத் தேர்வு ஆகியவைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமார் மற்றும் மாணவரணி அமைப்பாளர் டாக்டர் இப்ராஹிம் தலைமை தாங்கினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாநகரச் செயலாளர் மு. மதிவாணன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா, வண்ண அரங்கநாதன், குணசேகரன் செந்தில், லீலாவேலு, செங்குட்டுவன் மூக்கன், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisment