ADVERTISEMENT

டெல்லி தேர்தல் முடிவுகள்... எட்ட முடியாத உயரத்தில் 'ஆம் ஆத்மி' 

11:52 AM Feb 11, 2020 | kalaimohan

கடந்த எட்டாம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் தொடங்கியுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. 12.09 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 57 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 53.6 சதவீத வாக்குகளும், பாஜக 39.31 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.10 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது.

ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT