ADVERTISEMENT

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை மீண்டும் கூடுகிறது!

12:13 PM Jun 24, 2019 | santhoshb@nakk…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் சைபர் குற்றங்களை விசாரிக்க அதிகாரங்கள் வழங்கும் சட்டத்திருத்த மசோதா, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டத்தில் திருத்தம், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் , நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம், தொழிலாளர் நல சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன் பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதாக்களை உடனடியாக தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சில மசோதாக்கள் மக்களவையில் கடந்த நாடாளுமன்ற காலத்தில் நிறைவேறியுள்ள போதும் மாநிலங்களவையில் போதிய ஆதரவு கிடைக்காமல் திருத்தம் செய்ய நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் சில மசோதாக்களை மீண்டும் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT