ADVERTISEMENT

பிரச்சாரத்தில் "டூப்ளிகேட் கம்பீர்" ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

07:03 PM May 10, 2019 | santhoshb@nakk…

பாஜக சார்பில் டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பிரச்சாரத்தின் போது சினிமா காட்சிகளில் வரும் டூப்ளிகேட் கம்பீர் வேடமிட்டு காரில் ஒருவர் பயணம் செய்யும் புகைப்படத்தை டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவரும் , டெல்லி மாநில துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்கான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிசோடியா டெல்லியில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக தன்னை போன்ற வேடமிட்ட ஒருவரை கவுதம் தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த மக்களவை தொகுதியில் தேர்தல் ஆறாவது கட்டமாக மே 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களை ஆம் ஆத்மி கட்சி முன் வைத்துள்ளது. ஏற்கெனவே ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கும் பாஜகவின் கவுதம் கம்பீருக்கும் இடையே வார்த்தைப் போர் நீடித்து வரும் நிலையில் டெல்லி மாநில துணை முதல்வரின் குற்றச்சாட்டு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த கவுதம் கம்பீர் , என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக ஆம் ஆத்மி கட்சிக்கு பதிலடிக் கொடுத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT