1 rs canteen

முன்னாள் இந்தியகிரிக்கெட்வீரர் கௌதம்கம்பீர். ஓய்வுக்குப் பிறகு பாஜகவில்சேர்ந்தஇவர், தற்போது டெல்லியின் கிழக்குமாநிலஎம்.பியாகஇருந்து வருகிறார்.

Advertisment

கௌதம்கம்பீர், மக்கள் யாரும்வெறும் வயிற்றோடுஉறங்கக் கூடாதுஎன்ற நோக்கத்தில் தனது தொகுதி முழுவதும் குறைந்தவிலையில்உணவு வழங்கும் 'மக்கள் உணவகத்தை' 10 இடங்களில் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

Advertisment

இந்தநிலையில், இன்று கிழக்குத் தொகுதியின் காந்தி நகர் பகுதியில், முதல் மக்கள் உணவகத்தை கௌதம்கம்பீர் திறந்து வைத்துள்ளார். இந்த உணவகம்வெறும் ஒரு ரூபாய்க்கு மதியஉணவு வழங்கும் எனவும், அடுத்த மக்கள் உணவகம்மயூர் விஹார் மாவட்டத்தில் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் கிழக்கு டெல்லி பகுதியில் 5 முதல் 6 மக்கள் உணவகங்கள் திறக்கப்படும் எனவும் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

கெளதம்கம்பீர் அறக்கட்டளை மற்றும் நாடாளுமன்றநிதி ஆகியவற்றின் மூலம் இந்த 'மக்கள் உணவகம்' நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment