ADVERTISEMENT

33 ஆயிரம் டன் கரோனா கழிவுகளை உற்பத்தி செய்த இந்தியா!

01:13 PM Jan 12, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் வேகமாகப் பரவிய கரோனா தொற்று, தற்போது குறைந்துவருகிறது.

இந்தநிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 7 மாதங்களில் இந்தியா, 33000 டன் கரோனா கழிவுகளை உற்பத்திச் செய்துள்ளது. கரோனா கழிவுகள் என்பது, கரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள், கையுறைகள் உள்ளிட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் 5,367 டன் கரோனா கழிவுகளை உற்பத்திச் செய்துள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் கேரளா (33,000 டன்), குஜராத் (3,086டன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகம் இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழகம், கடந்த ஏழு மாநிலங்களில் 2,086 டன் கரோனா கழிவுகளை உற்பத்திச் செய்துள்ளது.

கரோனா கழிவுகள், அக்டோபர் மாதத்தில்தான் அதிகமாக உற்பத்தியாகியிருக்கின்றன. அம்மாதத்தில் 5,500 டன்கள் கரோனா கழிவுகள் உற்பத்தியாகியிருக்கின்றன என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT