india corona lockdown extension

Advertisment

சீனாவிலிருந்து பறந்து வந்து இந்தியாவில் முதல் முதலாக கேரளா மாநிலத்தில் கால் பதித்து அப்படியே நாடு முழுக்க நடை போட்டுக்கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். இதுவரை முறையாக மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த வைரஸை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உலக நாடுகள் திணறுவதைப் போல இந்தியாவும் திணறத்தான் செய்தது. சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மட்டுமே இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி என்பதால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இன்றுடன் நாடுதழுவிய 3- ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. ஆனால் முன்பே நான்காவது ஊரடங்கு உத்தரவு உண்டு என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.