ADVERTISEMENT

கரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

07:28 PM Apr 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும் மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி இன்று (08/04/2021) மாலை காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக அரசின் சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல் கூறுகின்றன.

மாநில முதல்வர்களிடம் கரோனா தடுப்பு பணிகள், தடுப்பூசி போடும் பணிகள் குறித்து கேட்டறியும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT