ADVERTISEMENT

மும்பையில் தொடங்கியது ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்

07:07 PM Aug 31, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA - INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) எனப் பெயர் சூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஷ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT