Skip to main content

துபாய்க்கு செல்ல கடலுக்கடியில் ரயில் விடும் திட்டம்...

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

tra

 

மும்பையிலிருந்து, துபாயின் ஃபுஜைரா நகருக்கு கடலுக்கடியில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என துபாயை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இந்தியா யு.ஏ.ஈ கூட்டு மாநாட்டில் இது குறித்து பேசப்பட்டது. இந்த திட்டம் தற்பொழுது ஆரம்ப நிலையில் உள்ளது. கண்டிப்பாக வருங்காலத்தில் இது செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. இந்த திட்டம் மூலம் இந்திய அமீரக உறவு மேம்படும், ஏற்றுமதி, இறக்குமதிக்கு உதவியாக இருக்கும் எனவும் இந்த திட்டம் குறித்து அதன் வடிவமைப்பாளர் அப்துல்லா அல்ஷெஹி கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

டிக்கெட் பரிசோதகர் கையைக் கடித்த பெண்; ஓடும் ரயிலில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Woman bites ticket inspector hand in moving train

ரயிலில் டிக்கெட் பரிசோதகரைக் கடித்த இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் விரார் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த ரயில் தகிசர் - மிரோரோடு இடையே சென்றுக்கொண்டிருந்தபோது, அதிரா(26)  என்ற பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், ரயில் பெட்டியில் இருந்த சிங் என்ற பெண்ணிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தனது கணவர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய டிக்கெட்டை காட்டியுள்ளார். ஆனால், இந்த டிக்கெட் செல்லாது என்று கூறிய பரிசோதகர் அதிரா, அடுத்து வரும் மிரா ரோடு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். இதனால்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணி மிராரோடு ரயில் நிலையம் வந்ததும், டிக்கெட் பரிசோதகர் அதிராவின் கையை கடித்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிரா கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பயணிகள் பெண் பயணியை பிடித்து ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பரிசோதகருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பயணிமீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.