ADVERTISEMENT

”திருடர் பிரதமர் அமைதியாக இருக்கிறார்” என்னும் ஹேஸ்டேகில் நிர்மலா சொன்ன 7 பொய்கள்- காங்கிரஸ்

06:29 PM Sep 24, 2018 | santhoshkumar

ADVERTISEMENT


ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்திய பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல்லிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றியது என்று பல குற்றச்சாட்டுகள் பாஜகவின் மீது வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த மேடையில் பேசினாலும் ரஃபேல் ஊழல் என்றுதான் பேச்சை தொடங்குகிறார். காங்கிரஸுக்கு ஏற்றார்போல ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவும் சர்ச்சையாகவும் அளவிற்கு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் சொல்வதை பார்த்தால் மோடி ஒரு திருடர் என்று குறிப்பிடுகிறார் போல என்று கூறினார் ராகுல் காந்தி.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதராமன் ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பேசிய ஏழு பொய்கள் என்ற வீடியோவை காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் நிர்மலா சீதாரமன் ஒருமுறை ஒன்றை சொல்ல, அடுத்த முறையே வேறு கருத்தை சொல்கிறார். இப்படியாக அந்த வீடியோ வெளியிட்டுள்ளது காங்கிரஸ். மேலும் அதில் திருடர் பிரதமர் அமைதியாக இருக்கிறார் என்று ஹிந்தியில் பதிவிட்ட ஹேஸ்டேக் வைத்தும் இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT