ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் இணைய பிரசாந்த் கிஷோர் மறுப்பு!

04:30 PM Apr 26, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் இணைய தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திய டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கிட்டத்தட்ட நான்கு முறை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் இணைவது, 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வகுப்பாளராகப் பணியாற்றுவது தொடர்பாக, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த ஆலோசனையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த ஆலோசகர்களான கே.சி. வேணுகோபால், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இதன்பிறகு, கடந்த ஏப்ரல் 21- ஆம் தேதி அன்று 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்த ஆய்வு அறிக்கையை சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கினார்.

இந்த ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து தாக்கல் செய்வதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் கொண்டக் குழுவை அமைத்தார் சோனியா காந்தி. இதைத் தொடர்ந்து, அக்குழு சோனியா காந்தியிடம் அறிக்கையைச் சமர்பித்தது.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சியில் இணைய தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேராவிட்டாலும், ஆலோசனைகள் வழங்கியதற்காக அவருக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியின் சேர்க்க அக்கட்சியில் உள்ள சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் கூறுகின்றன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT