ADVERTISEMENT

"யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்" - புகார் கூறும் காங்கிரஸ்...

03:46 PM Aug 11, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டது அரசின் ஆதரவு இல்லாமல் எப்படி நடைபெற்றிருக்கும் எனக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பரசுராமர் ஜெயந்திக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் எனக் காங்கிரஸ் புதிதாக அமைத்த 'பிராமின் சேத்னா சமிதி’ எனும் அமைப்பின் தலைவரான ஜிதின் பிரசாத், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதினார். கடந்த 2007 ஆம் ஆண்டு, பரசுராமர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவித்தது ஆட்சியிலிருந்த சமாஜ்வாதி கட்சி. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பரசுராமர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில், இவ்விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி, ‘பரசுராமர், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கும், பிராமணர்களுக்கும் முக்கியக் கடவுளாக உள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசு ஆதரவில்லாமல் இது சாத்தியமா, பிராமணக் குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டபோது சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் எங்கிருந்தன,’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT