ADVERTISEMENT

கேரள இடைத்தேர்தலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு பாலா தொகுதியை கைப்பற்றிய கம்யூனிஸ்ட் கூட்டணி!

05:35 PM Sep 27, 2019 | kalaimohan

கேரளாவில் 9 முறை தொடர்ந்து நிதியமைச்சராகவும், தொடர்ந்து 54 ஆண்டுகளாக கோட்டயம் பாலா தொகுதி எம்எல்ஏவாக இருந்த கேரளா காங்கிரஸ் (எம்) பிரிவு தலைவர் மாணி இறந்து போனதால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் கேரளா காங்கிரஸ் (எம்) பிரிவு வேட்பாளராக அக்கட்சியை சேர்ந்த டோம் ஜோஸ் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாணி சி.கப்பன், பாஜக சார்பில் ஹரி ஆகியோர் போட்டியிட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், கேரளா காங்கிரஸ் (எம்) பிரிவு டோம் ஜோஸ், பாஜக ஹரியை தோற்கடித்து 2949 வாக்கு வித்தியாசத்தில் 54 ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கூட்டணியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் மாணி சி கப்பன் வெற்றி பெற்றார். இதில் பாஜக ஹரி 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். 2016-ல் இங்கு போட்டியிட்ட பாஜக 24 ஆயிரம் வாக்குகள எடுத்தியிருந்த நிலையில் இந்த முறை 18 ஆயிரம் வாக்குகளைதான் எடுக்க முடிந்தது. இதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த துஷார் வெள்ளப்பள்ளியின் பிடிஜேஎஸ் வெளியேறியதுதான்.

தற்போது வெற்றி பெற்றியிருக்கும் மாணி சி.கப்பன் ஏற்கனவே கேரளா காங்கிரஸ் மாணியை எதிர்த்து 3 முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது மாணி இல்லாத நிலையில் அந்த கட்சியை வழி நடத்தும் அவரின் மகன் ஜோஸ்கோ மாணிக்கும், அந்த கட்சியின் மூத்த நிர்வாகி பிசி ஜோசப்புக்கும் ஏற்பட்ட மோதல்தான் தோல்விக்கு காரணம் என்கின்றனர் கேரளா காங்கிரஸ் எம் பிரிவு நிர்வாகிகள்.

ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரியில் உதவிப்பேராசியராக இருந்த வெங்கடேசன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு கைதானதால் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT