ADVERTISEMENT

கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவனை ஒப்படைத்தது சீனா

02:55 PM Jan 27, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனா, இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் கிராமங்களை உருவாக்கி வருவதுடன், லடாக்கில் பாலம் ஒன்றையும் கட்டி வருகிறது. சீனா, கிராமங்களை உருவாக்கியுள்ள பகுதிகளும், தற்போது பாலம் கட்டி வரும் பகுதியும் நீண்டகாலமாகவே அந்தநாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்துவருவதாக இந்திய அரசு கூறி வருகிறது. அதேபோல் அருணாச்சல மாநிலத்தின் பகுதிகளுக்கு அண்மையில் சீன மொழிப்பெயர்களைச் சூட்டியது.

இந்தநிலையில் மிராம் டாரோன் என்ற 17 வயது சிறுவனைச் சீனா இராணுவம் கடத்திச் சென்றுவிட்டதாக, அம்மாநிலத்தின் பாஜக எம்.பியான தபீர் காவ் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதே நேரத்தில் இந்தியா, மிராம் டாரோனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.

இந்திய இராணுவம், சீனா இராணுவத்தைத் தொடர்புகொண்டு சிறுவன் மயமானது குறித்து பேசியது. இதனைத்தொடர்ந்து மயான சிறுவன், தங்கள் நாட்டு எல்லையில் இருப்பதை உறுதி செய்த சீன இராணுவம், சிறுவனை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைப்பதாகத் தெரிவித்தது. இதன்தொடர்ச்சியாக சீன இராணுவம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வாச்சா டமாயில் சிறுவன் மிராம் டாரோனை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT