India lost 26 patrol areas Ladakh to China

Advertisment

கிழக்கு லடாக் பகுதியில் 26 ரோந்து பகுதிகளை இந்தியா சீனாவிடம் இழந்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த வாரம் அனைத்து மாநில டிஜிபிக்கள் மாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கிழக்கு லடாக்கில் 26 ரோந்து பகுதிகளைச் சீனாவிடம் இந்தியா இழந்துவிட்டதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கிழக்குலடாக் எல்லைப் பகுதியில் காரக் ஓரம் கணவாயில் இருந்து சுமுர் வரை 65 ரோந்து பகுதிகள் உள்ளன. அதில் 26 பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் சரியான முறையில்ரோந்து பணி மேற்கொள்ளப்படாததால் சீன ராணுவம் அவற்றை கைப்பற்றியுள்ளதாக லடாக் நகரின் எஸ்.பி நித்தியா சமர்ப்பித்த ஆய்வறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வறிக்கை பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.