ADVERTISEMENT

தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள்!

08:33 AM May 09, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

ADVERTISEMENT

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுடன் தோளில் சிவப்பு நிறத் திட்டுகள் ஏற்பட்டு, எரிச்சல், காய்ச்சல், வலியைத் தரும் பாதிப்பு தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. அதிகளவில் குழந்தைகளைப் பாதிக்கப்படும் இந்த காய்ச்சலால் கொல்லம் மாவட்டத்தில் அரசு அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

ஆரியங்காவு, அஞ்சல், நெடுவதூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த காய்ச்சலால் தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தக்காளி நிறத்தில் காணப்படும் திட்டுகளால் தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்பட்டாலும், இதற்கும், தக்காளிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT