மும்பையின்நிழல் உலக தாதாக்களில்ஒருவர் சோட்டா ராஜன். ஒருகாலத்தில் மற்றொரு நிழல் உலக தாதாவானதாவூத் இப்ராஹிமுடன் இணைந்து செயல்பட்ட இவர், பின்பு அவருக்கேவிரோதியாக மாறினார். சோட்டா ராஜன் மீது பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகள் உள்ளன. மேலும் இவர்மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்தார்.
இறுதியில் இந்தோனேசியாவின் பாலி தீவில் கைதுசெய்யப்பட்டசோட்டா ராஜன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்குப் பல்வேறு வழக்குகளின் கீழ் ஆயுள் தண்டனை உள்ளிட்டவை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த அவருக்கு சமீபத்தில் கரோனாதொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில்அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் பரவின. ஆனால் அது வதந்தி எனத் தற்போது தெரியவந்துள்ளது. சோட்டா ராஜன் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.