Skip to main content

தாதா சோட்டா ராஜனுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட உ.பி தபால் துறை!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
chhota rajan stamp

 

 

பிரபல தாதாக்கள் சோட்டா ராஜனுக்கும், முன்னா பஜ்ரங்கிக்கும் உத்தரப்பிரதேச மாநில கான்பூரில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்திய தபால் துறையின் 'எனது அஞ்சல் தலை' (my stamp) திட்டத்தின் மூலம், யார் வேண்டுமானாலும் தங்கள் முகம் பதித்த அஞ்சல் தலையை பெற முடியும். இதற்கு புகைப்படத்தோடு அடையாள அட்டையையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தநிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டத் அஞ்சல் தலைகளில் தாதாக்கள் சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கான்பூர் தலைமை அஞ்சலக அதிகாரி, தபால் தலைகளில் தாதாக்கள் இடம்பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும். தபால் ஊழியர்கள் புகைப்படங்களை உறுதி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும், வடிக்கையாளர்களும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறப்பு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Prime Minister Modi released special postage stamps

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பிரபலங்கள், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் பாஜக, ராமர் கோவிலை அயோத்தியில் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக ராமர் கோவில் விவகாரத்தை வைத்து பிரச்சாரம் நடத்தி இருந்தது.

அதே சமயம் தொடர்ந்து பாஜக இரண்டு முறை மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. கோவில் வேலைகள் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில், பாஜக அரசு தேர்தலை காரணம் காட்டி முன்கூட்டியே கோவிலை திறப்பதாகவும், இது அரசியல் செயல்திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை வெளியிட்டார். இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “புனித அயோத்தி தாம் மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் பாரம்பரியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலையை வெளியிடும் பாக்கியம் இன்று கிடைத்தது. இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் ஸ்ரீராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகள் தொடர்பான புத்தகமும் வெளியிடப்பட்டது. நினைவு தபால் தலையும், இந்தப் புத்தகமும், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கும்பாபிஷேகத்தின் மங்களகரமான நிகழ்வை பல தலைமுறைகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மும்பையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்; 12 மணி நேரம் செயல்படும் மத்திய அரசு நிறுவனம்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

following mumbai in tamilnadu central government agency that operates for 12 hours
கோப்பு படம்

 

தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் ஒரு தகவலை ஒரே நிமிடத்தில் உலகின் எதிர் திசையில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. ஆனால், உலகமயமாக்கல் நிகழ்வதற்கு முன்பு வரை ஒரு தகவலை அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதே பெரும் காரியமாக இருந்து வந்தது. அந்தக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தது தபால் துறை. அரசுத் துறையான தபால் துறை தொலைத்தொடர்பு வசதிகள் பெருகத் தகவல் பரிமாற்றத்தில் தேக்கம் கண்டது. ஆனால், மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எளிதாக்க பல்வேறு முயற்சிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இணைய வங்கி சேவை, காப்பீடு வழங்குதல் போன்றவற்றை முன்னெடுத்து வருகிறது.

 

சமீபத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைத் திட்டம் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 தபால் நிலையங்களில் 12 மணி நேரச் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்  முறையாக பகல் 12 மணி நேரமும் செயல்படும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் தபால் நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த தபால் நிலையமானது காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

மேலும் வங்கி பரிவர்த்தனை சேவைகளான சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு,  மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் காப்பீட்டு பரிவர்த்தனைகள், தபால் சேவையில் பதிவு தபால், விரைவு தபால், பார்சல் சேவைகள், அயல்நாட்டு தபால் சேவை, விபிஎல், விபிபி தபால் சேவைகள், மணியார்டர் போன்ற சேவைகளும் 12 மணி நேரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.