ADVERTISEMENT

சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக ரயில் பாதை - விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசு முடிவு!

05:06 PM Feb 11, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய நாடளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தநிலையில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை-பெங்களூர்-மைசூருக்கு இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், டெல்லி-அகமதாபாத், மும்பை-ஹைதராபாத், சென்னை-பெங்களூரு-மைசூரு, வாரணாசி-ஹவுரா மற்றும் டெல்லி-அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில் பாதைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவின் எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT