ADVERTISEMENT

'சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்'- மத்திய அமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடிதம்!

08:31 PM Apr 11, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'நாடு முழுவதும் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அசாதாரண சூழலில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். கரோனா பரவல் சூழலில் தேர்வு நடத்துவது பாதுகாப்பானது அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவதற்கு முன் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிக்க வேண்டும்' என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT