ADVERTISEMENT

உ.பி.யில் புல்டோசர் இடிப்புகளுக்கு தடைக்கோரும் வழக்கு! 

11:47 AM Jun 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளைப் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (16/06/2022) விசாரிக்க உள்ளது.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய விவகாரத்தில், நுபுர்சர்மா மீது நடவடிக்கை கோரி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது, உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வன்முறைக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்படும் நான்கு பேரின் வீடுகள் ஆக்கிரமிப்பு எனக் கூறி புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட்டன.

இதுபோன்று இடிப்பதற்கு அரசுக்கு தடை விதிக்கக்கோரி, ஜாமியத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT