ADVERTISEMENT

புதுவை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை; 3 பேர் கைது! 74 கிலோ கஞ்சா பறிமுதல்!

10:21 PM Aug 31, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் - கதிர்காமம் காண்பெட் பெட்ரோல் பங்கு பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புதுச்சேரி அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்றுகொண்டிருந்த தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகரைச் சேர்ந்த அருண்(30), சாரம் பிரித்திவ்ராஜ்(23), ஷண்முகாபுரம் ராஜ்குமார்(26) ஆகிய 3 பேரை பிடித்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் மேலும் 72 கிலோ கஞ்சா மறைந்து வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். பின்னர் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT