ADVERTISEMENT

எருமைகள் செய்த காரியம் - பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய உரிமையாளர்! 

11:57 AM Dec 29, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாநகராட்சியில், தனக்கு சொந்தமாக எருமைகள் செய்த காரியத்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டியுள்ளார் அதன் உரிமையாளர்.

ADVERTISEMENT

குவாலியர் மாநகராட்சியை சேர்ந்தவர் பீட்டல் சிங். பால் பண்ணை நடத்தி வரும் இவருக்கு சொந்தமான எருமைகள், சுத்தம் செய்யப்பட்டுள்ள ரோட்டில் சாணமிட்டுள்ளன. மேலும் அவரது எருமைகள் ரோட்டில் சுற்றி திரிந்துள்ளன.

இதற்கு முன் பலமுறை எச்சரித்தும் பீட்டல் சிங், அவர் வளர்க்கும் எருமை மாடுகள் ரோட்டில் அலைவதை தடுக்க தவறியதால், குவாலியர் மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பீட்டல் சிங்கும் அந்த அபராதத்தை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கமால் செலுத்தியுள்ளார்.

மாடு செய்த காரியத்தால் உரிமையாளர் பத்தாயிரம் ரூபாய் செலுத்த நேரிட்டது வேடிக்கையான பேசுபொருளாய் மாறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT