ADVERTISEMENT

இழுத்து மூடப்படும் பி.எஸ்.என்.எல்...?

01:19 PM Feb 13, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜியோ அறிமுகமானதில் இருந்து ஏர்டெல், வோட்ஃபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சற்று சரிவை சந்தித்தது. மேலும் ஜியோவின் ரீ-சார்ஜ் பிளான்களால் மற்ற நிறுவனங்களும் அவைகளின் ரீ-சார்ஜ் திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நிலைமைக்கு சென்று, மாற்றங்களையும் செய்தது. இருந்தபோதும் ஜியோ நிறுவனத்தை முழுவதுமாக எதிர்கொள்ளமுடியாமல் மற்றத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போராடிவருகின்றது. அதேசமயம் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் தொடர் இழப்புகளை சந்தித்து வருகிறது. அதன்படி 2017-18 ஆண்டு இறுதி வரை பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டு புத்துணர்வு கொடுக்க என்ன செய்யலாம், அல்லது நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராயுமாறு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன், சமீபத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், நஷ்டத்தில் இருந்து நிறுவனத்தை மீட்டு புத்துயிர் கொடுக்க என்ன செய்யலாம், நிறுவனத்தின் பங்கு முதலீடுகளை குறைக்கலாமா, அல்லது நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT