Skip to main content

ஜியோவை மிஞ்சிய அதிரடி ஆஃபரை அறிவித்த பி.எஸ்.என்.எல்...

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ உள்ளிட்டவை நஷ்டக்கணக்கு காட்டி வரும் நிலையில் வருங்காலத்தில் கட்டணங்களை உயர்த்தபோவதாக அறிக்கைகள் கடந்த வாரத்தில் வெளிவந்தது.
 

bsnl

 

 

இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என். எல், ஒரு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. அதில், ரூ.1699க்கு 365 நாட்களுக்கு தினசரி 250 நிமிடம் கால்கள் இலவசம், தினசரி 2 ஜிபி இணையவசதி மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், நவம்பர் மாதத்திற்குள் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு சேவை பயன்படுத்தி இந்த ஆஃபரை அனுகுவர்களுக்கு 365+60 நாட்கள் இலவசம் என்று தெரிவித்துள்ளது. 

அண்மையில்தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி இணையசேவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அறிவிப்பு ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

 

Kamal


 

சார்ந்த செய்திகள்

Next Story

 11 மொழிகளில் ஒருநாள் கிரிக்கெட்;  ஜியோ சினிமா இலவச ஒளிபரப்பு!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 ODI cricket in 11 languages; Jio Cinema Free Streaming

 

உள்நாட்டுப் போட்டிகளை, பிசிசிஐ இன்டர்நேஷனலிடமிருந்து பிரத்யேகமாக ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் திட்டம் குறித்து வயாகாம் 18 இன்று அறிவித்துள்ளது.

 

முதலாவது சர்வதேசத் தொடரை ஜியோ சினிமாவில் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது ஜியோ சினிமா. டி.வி.யிலும், செல்போன் செயலி மூலமாகவும் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த கிரிக்கெட் தொடர் கலர்ஸ் தமிழ் (தமிழ்), கலர்ஸ் பங்களா சினிமா (பெங்காலி), கலர்ஸ் கன்னடா சினிமா (கன்னடா), கலர்ஸ் சினிபிளக்ஸ்  சூப்பர்ஹிட்ஸ் (ஹிந்தி), ஸ்போர்ட்ஸ்-18-1 ஹெச்டி, ஸ்போர்ட்ஸ் 18-1 ஹெச்டி (ஆங்கிலம்) ஆகிய 8 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

 

50 ஓவர் உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் கிரிக்கெட் நிபுணர்களின் சிறப்பான கிரிக்கெட் வர்ணனையும் உண்டு. டாடா ஐபிஎல் போட்டி - 2023 நடைபெற்றபோது அனைத்து சாதனைகளையும் உடைத்து, முன்னோடியில்லாத அளவிலான ஈடுபாடு, பார்வையாளர்கள் மற்றும் ஒத்திசைவை நிறுவிய ஜியோ சினிமா தற்போது பார்வையாளர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை இதுவரை கண்டிராத ஜியோ சினிமா டி.வி. வழியாக இலவசமாக வழங்கவுள்ளது வயாகாம்18. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 50 ஓவர்கள் ஆட்டத்தை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க முடியும்.

 

இதுகுறித்து வயாகாம்18 - ஸ்போர்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அனில் ஜெயராஜ் கூறும்போது, “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் பார்வையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் புதிய தாயகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும். மேலும் பொறுப்புணர்வுடன், விளையாட்டை ரசிக்கும் விதத்தில் முன்னோடியான மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம். இதுவரை பார்த்திராத வழிகளில் ரசிகர்கள் மிகவும் விரும்புவதை வழங்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் டிஜிட்டல் முறையில் தொடர்ந்து லீனியர்/ ஆஃப்லைன் டிவி நிகழ்ச்சிகளை வழங்குவோம். பிசிசிஐ நடத்தும் தொடர்களை இணையற்ற முறையில் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

 

ஜியோ சினிமா செயலியை (ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட்) செல்போன்களில் பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியும். மேலும், சமீபத்திய புதுப்பிப்பு செய்திகள், செய்திகள், விளையாட்டு ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் சமூக வலைத்தளங்களில் Sports18 -ஐ பின்தொடரலாம். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் வலைத்தளங்களில் Jio Cinema செயலியைப் பின்தொடரலாம்.

 

போட்டி அட்டவணை


செப்டம்பர் 22, முதலாவது ஒருநாள் போட்டி, பகல் 12.30, பிசிஏ ஸ்டேடியம், மொஹாலி.
செப்டம்பர் 24, 2வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, ஹோல்கார் ஸ்டேடியம், இந்தூர்.
செப்டம்பர் 27, 3வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, எஸ்சிஏ ஸ்டேடியம், ராஜ்கோட்.

 


 

Next Story

ராகுலின் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிப்பு!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

disconnection of BSNL in Rahul gandhi office

 

எம்.பி பதவி நீக்கத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த இணைப்பை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

 

இதனிடையே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட இலவச டெலிஃபோன் மற்றும் இணையதள இணைப்புகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.