ADVERTISEMENT

மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...போஃபர்ஸ் வழக்கு

12:16 PM Nov 02, 2018 | santhoshkumar


ராஜிவ் காந்தி பிரதமாரக இருந்த போது, சுவீடனை சேர்ந்த போபர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போட்டது. ரூ1,437 கோடிசெலவில் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக ரூ. 64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து சிபிஐ விசாரணை உத்தரவிடப்பட்டது. பின்னர், சிபிஐ வழக்கை பதிவு செய்ய, இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT

2005ல் டெல்லி உயர்நீதிமன்றம் போபர்ஸுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தொழிலதிபர்களான இந்துஜா சகோதர்கள் உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி வேண்டும் என்று சிபிஐ மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து கடந்த வருடம் மத்திய அரசு போபர்ஸ் வழக்கில் வந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தது. சிபிஐ 2017 ஃபிப்ரவரி மாதத்தில் இந்த திர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு ரஞ்சன் கோகாய் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், இந்த மேல் முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT