ADVERTISEMENT

இந்தியாவில் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்!

11:21 AM Jan 11, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் பறவைக் காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகிறது. 'எச்5 என்1' எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளில் அதிகளவில் காணப்படுகின்றன. பொதுவாக பறவைகளின் இடப்பெயர்வு காலத்தில் இந்நோய், பறவைகளை அதிகம் தாக்கும்.

இந்தியாவில் இதுவரை கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது. கேரளாவில் பறவைக் காய்ச்சல், மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பறவைக் காய்ச்சல், தங்கள் மாநிலங்களுக்கும் பரவாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இறந்த காக்கைகளையும், வாத்துக்களையும் சோதித்ததில், அவற்றுக்குப் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லியின் கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT