ADVERTISEMENT

நிதிஷ்குமார் எடுத்த அதிரடி முடிவு... முதன்முறையாக மாநிலத்தில் பின்னடைவைச் சந்தித்த பா.ஜ.க.!

04:54 PM Aug 09, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் ஆளுநர் பகு சௌஹானை இன்று (09/08/2022) நேரில் சந்தித்த முதலமைச்சர் நிதிஷ்குமார், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினோம் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 243 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 பேரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 79 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 19 பேரும், இடதுசாரிகளுக்கு 12 பேரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், புதிய கூட்டணிக்கு சுமார் 160 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.

இதனால், புதிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விரைவில் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் அதிரடி நடவடிக்கையால், பா.ஜ.க. முதன்முறையாக ஒரு மாநிலத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாக, பீகார் மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT