ADVERTISEMENT

சர்வதேச அளவில் சர்ச்சையான மோடி ஆவணப்படம்; அதிரடி காட்டிய யூடியூப்

08:42 AM Jan 20, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசு திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும், இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்வி' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டங்கள் தெரிவித்தது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், ஒரு சார்பாக ஆவணப்படம் காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதைக் காட்டுகிறது என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் 'இந்தியா: மோடிக்கான கேள்வி' ஆவணப்படத்தை யூடியூப் நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், “மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT