சட்டமேதை அம்பேத்கரின் ஒப்பற்ற கனவுகளை நிறைவேற்றவே பா.ஜ.க. முயற்சித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisment

modi

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில்ஈடுபட்டு வருகிறார். இன்று நமோ செயலியின் மூலம் கர்நாடக பாஜகவின் எஸ்.இ., எஸ்.டி., பி.சி. மற்றும் ஸ்லம் மோர்சா ஊழியர்களிடம் பேசிய மோடி, ‘காங்கிரஸ் அரசு தனது ஆட்சிக்காலத்தில் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கத் தவறிவிட்டது. நம் அரசு எஸ்.இ./எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தை கடுமையானதாக ஆக்கியிருக்கிறது. பா.ஜ.க.வில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக எஸ்.இ./எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையினர்கள் அதிகமானோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டார்.

மேலும், எங்களது ஆட்சியில் மட்டும்தான் அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். அவரது கனவான வலிமையான வளமான தேசத்தை உருவாக்க பாடுபடுவோம் எனவும் அவர் கட்சி ஊழியர்கள் மத்தியில் உரையாடியுள்ளார்.