ADVERTISEMENT

பாபர் மசூதி இடிப்பு வழக்கு... அனைவரும் விடுதலை...

12:33 PM Sep 30, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 32 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழங்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணையின்போதே உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கரோனா ஊரடங்கு காலத்தில் காணொளிக்காட்சி மூலமாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT