ADVERTISEMENT

வேதாந்தா ஆலையில் குழப்பத்தை ஏற்படுத்தியது சர்வதேச சதிகாரர்கள்: பாபா ராம்தேவ்

08:27 AM Jun 26, 2018 | Anonymous (not verified)

அனில் அகர்வாலுடன் பாபா ராம்தேவ்

வேதாந்தா ஆலையில் குழப்பத்தை ஏற்படுத்தியது சர்வதேச சதிகாரர்கள் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவைச் சேர்ந்த யோகா குரு பாபா ராம்தேவுக்கு லண்டனில் இருக்கும் மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. இதற்காக லண்டன் சென்ற அவர், அங்கு வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வாலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது,

"லண்டன் பயணத்தின் போது, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வாலை சந்தித்து பேசினேன். லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் அவரது பங்களிப்பை நான் வணங்குகிறேன்.

சர்வதேச சதிகாரர்கள் இந்தியாவின் தெற்கில் வேதாந்தாவின் ஆலையில் அப்பாவி உள்ளூர் மக்களைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய தொழிற்சாலைகள் நாட்டிற்கான தொழில் வளர்ச்சி கோயில்களாகும் அவை மூடப்படக்கூடாது" என்று கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT