ADVERTISEMENT

முடிவுக்கு வந்த அயோத்தியா மசூதி நில சர்ச்சை!

12:59 PM Feb 09, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் ஆணையிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மசூதிக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது மசூதி கட்டுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. கட்டப்படவிருக்கும் மசூதியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு உரிமைக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லியைச் சேர்ந்த சகோதரிகளான ராணி பலூஜா மற்றும் ராம ராணி பஞ்சாபி ஆகியோர், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று (08.02.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான உத்தரப்பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞர், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நில எண்களும், மசூதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நில எண்களும் வேறானவை எனத் தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பும் வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தது.

இதனையடுத்து, தகவல்களை சரிபார்க்காமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT