ADVERTISEMENT

அயோத்தி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

04:58 PM Oct 16, 2019 | santhoshb@nakk…

அயோத்தி இடம் தொடர்பான வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைப்பு.

ADVERTISEMENT

அயோத்தி இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை 40 நாட்கள் தொடர் விசாரணைக்கு பின் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT


அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு மூன்று தரப்பு உரிமை கோரியது. சன்னி வக்ஃபுவாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா வழக்கில் 2010- ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் இடத்தை சரிசமமாக பிரிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான 14 மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது.


இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17- ஆம் தேதி ஓய்வு பெறவிருப்பதால், அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT