ADVERTISEMENT

"ஆகஸ்ட் 5, வரலாற்றில் நினைவுகூரப்படும்" - பிரதமர் மோடி பெருமிதம்!

03:46 PM Aug 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதம மந்திரி கரிஃப் கல்யாண் அன்னா திட்டத்தின் உத்தரப்பிரதேச மாநில பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று (05.08.2021) காணொளி வாயிலாக உரையாடினார். அப்போது அவர், தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளை நம்பாமல், இன்னும் அதிகமான மக்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்கப்படுத்துமாறு பயனாளிகளை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பயனாளிகளிடம் பிரதமர் மோடி பேசியது வருமாறு:

“ஆகஸ்ட் 5ஆம் தேதி வரலாற்றில் நினைவுகூரப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதேநாளில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான முதல் அடி எடுத்துவைக்கப்பட்டது. இன்று பிரம்மாண்டமான ராமர் கோயிலின் கட்டுமானம் நடைபெற்றுவருகிறது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு செய்யவும், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவும் சிலர் எவ்வளவு முயன்றாலும் சரி, நம் நாடு அத்தகைய சுயநலத்திற்கும் அரசியலுக்கும் பணயமாகாது. புதிய இந்தியா பதக்கங்களை வெல்வதன் மூலமாக உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவருகிறது. ஒருவரின் வளர்ச்சி என்பது அவரின் கடின உழைப்பால் தீர்மானிக்கப்படுகிறது. ஏழைகளுக்குத் தீபாவளிவரை இலவச ரேஷன் வழங்கப்படும்.”

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT