ADVERTISEMENT

778 சதவீதம் உயர்ந்த பாஜக எம்.பி யின் சொத்து... அதிர்ச்சி பட்டியல்...

03:52 PM Mar 19, 2019 | kirubahar@nakk…

கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்து, மீண்டும் 2014-ம் ஆண்டும் எம்.பி யாக தேர்வான 153 மக்களவை எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 143 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதாவது, கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.5.5 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு ரூ.13.32 கோடியாக உயர்ந்துவிட்டது. அந்தவகையில் தொடர்ந்து இரண்டு முறை எம்.பி.யாக தேர்வான 153 பேரின் சொத்துக் கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி 2009 க்கு பிறகு 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹாவின் சொத்து மதிப்பு 778 சதவீதம் உயர்ந்துள்ளது. அதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 304 சதவீதம் அதிகரித்துள்ளது. ராகுல் காந்தியின் தாய் சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 573 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்களை தவிர சுஷ்மா ஸ்வராஜின் சொத்து மதிப்பு 139 சதவீதமும், அதிமுக எம்.பி. தம்பிதுரையின் சொத்து மதிப்பு 41 சதவீதமும், திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் சொத்து மதிப்பு 1281 சதவீதமம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்சி வாரியாக பார்க்கும்போது பாஜகவில் இருந்து இரண்டு முறையும் தேர்வான 72 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு 140 சதவீதம் உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 28 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு 109 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அதுபோல அதிமுக சார்பில் 3 எம்.பி.க்கள் இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களது சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 78 சதவீதம் அதிகரித்துள்ளது.

திமுக சார்பில் 2014 ஆம் ஆண்டு எந்த எம்.பி யும் தேர்வாகவில்லை என்பதால் இந்த பட்டியலில் திமுக இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT