ADVERTISEMENT

வீட்டுக் காவலில் கெஜ்ரிவால்...எம்.எல்.ஏ மீது தாக்குதல் - டெல்லியில் பரபரப்பு!

12:01 PM Dec 08, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 13 ஆம் நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. மேலும், இன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்தில் 12 ஆம் நாளான நேற்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் பாஜகவின் டெல்லி காவல்துறை, விவசாயிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பியது முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகவும், அவரின் வீட்டிற்குள் நுழையவோ, வீட்டிலிருந்து வெளியேறவோ யாரையும் அனுமதிக்கவில்லை எனவும் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்கச் சென்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அகிலேஷ் திரிபாதியை டெல்லி போலீஸ் சந்திக்கவிடாமல் தடுத்துத் தாக்கியதாகவும் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. மேலும், அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் கூறியுள்ளது. அடுத்தடுத்த மாறுபட்ட இந்த விளக்கங்களால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT