Skip to main content

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுமுன்பு துணை முதல்வர் போராட்டம்!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

manish sisodiya

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 13 ஆம் நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மேலும், இன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கும் ஆதரவும் தெரிவித்தார். 

 

இந்தநிலையில் பாஜகவின் டெல்லி காவல்துறை, விவசாயிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பியது முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகவும், அவரின் வீட்டிற்குள் நுழையவோ, வீட்டிலிருந்து வெளியேறவோ யாரையும் அனுமதிக்கவில்லை எனவும் ஆம் ஆத்மி கட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்கச் சென்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அகிலேஷ் திரிபாதியை டெல்லி போலீஸ் சந்திக்கவிடாமல் தடுத்துத் தாக்கியதாகவும் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டது. 

 

ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டை டெல்லி காவல்துறை மறுத்தது. கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்றும், அவர் விரும்பும் இடத்திற்குச் செல்லலாம் எனவும் அம்மாநில காவல்துறை கூறியது.

 

cnc

 

இந்தநிலையில், டெல்லி மாநிலத் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களும் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், துணை முதல்வரான தன்னையே, முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்கவிடவில்லை. ஆனால் அமித்ஷாவின் போலீஸ், கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை எனக் கூறுகிறது. நமது நாட்டின் விவசாயிகள் பக்கம் நிற்பது பெரும்குற்றமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும் அவர், போராட்டம் நடத்தும் விவசாயிகளைச் சிறை வைக்க டெல்லியின் மைதானங்களைத் தர மறுத்ததால், கெஜ்ரிவால் மத்திய அரசால் குறிவைக்கப்படுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவல் விதிப்பு!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Arvind Kejriwal has been ordered to be detained by the Enforcement Directorate

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை வருகை தந்தனர். ஏராளமான போலீசாருடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் அரவிந்த கெஜிரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு, வாரண்ட்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதாகவும், இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேசயம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலளார் பிரியங்கா காந்தி எனப் பல்வேறு தரப்பினரும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த கைது நடவடிகைக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருந்தனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை  விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட உள்ளார்.

Arvind Kejriwal has been ordered to be detained by the Enforcement Directorate

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி கூறுகையில், “நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மிகவும் மரியாதையுடனும் பணிவாகவும் ஏற்க மறுக்கிறோம். 2 வருட விசாரணைக்கு பிறகும் அமலாக்கத்துறையிடம் ஆதாரம் இல்லை. அமலாக்கத்துறை அவர்களின் சாட்சிகளை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியது. நாங்கள் அனைத்தையும் ஆராய்வோம். சாத்தியமான சட்ட வழிகள்,  நீதித்துறையின் முன் எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக குறிவைக்கப்படுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும் டெல்லி முதல்வராக இருப்பார். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் எந்த தடையும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது வரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.