ADVERTISEMENT

ரஜினி எந்த பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம்... ஆனால் விஸ்வாசம் இல்லாமல்...

01:14 PM Jan 10, 2019 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளராக நேற்று நியமிக்கப்பட்ட அப்சரா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், 'ரஜினி எந்தப் பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் மக்களின் விசுவாசம் இல்லாமல் ஒரு ஓட்டைக் கூட பெற முடியாது என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், '144 வருட பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக என்னை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இப்படி ஒரு பதவி கொடுத்திருப்பது திருநங்கைகள் சமுதாயத்திற்கே கிடைத்த அங்கீகாரம். ராகுல் காந்தி பிரதமரானால் நிச்சயமாக பெண்கள் மற்றும் திருநங்கைகளின் நலன்களுக்காக பாடுபடுவார். காங்கிரசில் பெண்களுக்கு 50% இடம் அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஆனால் மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் நலனுக்காக எந்தச் செயலும் செய்யபடவில்லை. மோடி அரசில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. கிராமப்புற பெண்களுக்கு எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்நிலையில் பா.ஜ.க ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. மக்கள் ஒரு போதும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரஜினி எந்தப் பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் மக்களின் விஸ்வாசம் இல்லாமல் ஒரு ஓட்டைக் கூட பெற முடியாது. கலைஞர், எம்,ஜி,ஆர் ஜெயலலிதா போன்றோரைப் பார்த்து ரஜினி அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும்' என கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT