ADVERTISEMENT

ரயில் விபத்து- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு

10:44 PM Oct 29, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ரயில் விபத்து நடந்துள்ள இடத்திற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளது.மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். சிக்னல் கோளாறே இந்த விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் ஒன்றிய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்: புவனேஷ்வர் 0674-2301525, 2303069, வால்டெய்ர் -0891-2885914, 89127 46330, 89127 44619, 81060 53051, 81060 53052, 85000 41670, 85000 41671, ஸ்ரீகாகுளம் 0891-2885911, 2885912, 2885913, 2885914.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT