ADVERTISEMENT

நில இழப்பீடு விவகாரம்: ஐந்து ஐ. ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி!

02:32 PM Sep 03, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சாவித்ரம்மா என்பவரது நிலத்தை, கடந்த 2016ஆம் ஆண்டு மனநலம் குன்றியவர்களுக்கான தேசிய நிறுவனத்தை அமைக்க மாநில அரசு கையகப்படுத்தியது. இருப்பினும் நிலத்தைக் கையகப்படுத்தியதற்கான இழப்பீடு சாவித்ரம்மாவுக்கு வழங்கப்படவில்லை.

இதனையடுத்து கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கோரி சாவித்ரம்மா ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று மாதத்திற்குள் நிலத்திற்கான இழப்பீட்டை வழங்க ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் சாவித்ரம்மாவுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதனையடுத்து சாவித்ரம்மா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்துவந்த ஆந்திர உயர் நீதிமன்றம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்பட ஐந்து பேருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நெல்லூர் மாவட்டத்தின் முதன்மை வருவாய் செயலராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு நான்கு வார சிறை தண்டனையும் 1,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ். ராவத்துக்கு ஒருமாதம் சிறையும் 1000 ரூபாய் அபராதமும், நெல்லூர் மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியருக்கு இரண்டு வார சிறையும் 1000 ரூபாய் அபராதமும் ஆந்திர உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லூர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர்கள் இருவருக்கு 2,000 ரூபாய் அபராதமும் ஒருவார சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT