ADVERTISEMENT

போலீஸை கன்னத்தில் அறைந்த முதல்வரின் சகோதரி; பரப்பரப்பை கிளப்பிய பகீர் சம்பவம்

12:10 PM Apr 25, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலுங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு நடைபெற்று வரும் நிலையில், ஆந்திர மாநில முதல்வரும், ஓய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவருமான ஜெகம் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஓய்.எஸ்.ஆர் தெலுங்கான கட்சியைத் தொடங்கி சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை விமர்சித்தும், கடுமையாக எதிர்த்தும் போராட்டங்கள் நடைப்பயணம் எனத் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் வினாத்தாள் கசிந்து பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள ஷர்மிளா, சிறப்புப் புலனாய்வு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் திட்டமிட்டு அலுவலகம் நோக்கி தனது காரில் சென்றார். இதனை அறிந்த தெலுங்கான போலீசார் ஷர்மிளாவின் காரை வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த ஷர்மிளா பணியிலிருந்த பெண் காவலரின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரியிடமும் ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து ஷர்மிளா கைது செய்யப்பட்டார். இது ஒரு புறமிருக்கக் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் ஷர்மிளாவை பார்க்க அவரது தாய் விஜயம்மா ஜூப்ளி ஹில்ஸ் காவல்நிலையத்திற்குச் சென்றார். ஆனால் ஷர்மிளாவை பார்க்க போலீசார் அனுமதிக்காததால் விஜயம்மாவும் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தன்னை தடுத்து நிறுத்திய பெண் காவலரை விஜயம்மா தாக்குவது போன்ற வீடியோவும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் போலீசாரை அறைந்த ஷர்மிளாவை 14 நாட்கள் சிறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT