LKG girl's parents beaten driver Telangana

4 வயது எல்.கே.ஜி படிக்கும் சிறுமிக்கு பள்ளி முதல்வரின் டிரைவரால் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த நான்கு வயது சிறுமி ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். சிறுமி, ஆங்காங்கே தனியாக உட்கார்ந்து அவ்வப்போது அழுதிருக்கிறார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தார் சிறுமியிடம் விசாரித்தபோது, சிறுமி படிக்கும் பள்ளி முதல்வரின் ஓட்டுநரான ரஜினி என்பவரால் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

Advertisment

இதனையடுத்து, தனது மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்ற சிறுமியின் பெற்றோர், சம்பந்தப்பட்ட நபருக்கு தர்ம அடி கொடுத்ததுடன், அவர் மீது பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஓட்டுநர் ரஜினியை கைது செய்து விசாரணை நடத்தியபோது, பள்ளியின் தலைவர் அறைக்கு எதிரே அமைந்துள்ள ஆய்வகத்தில் வைத்து சிறுமியை பாலியல் சீண்டல்செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து,ஓட்டுநர் ரஜினி மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், மற்ற பெற்றோர்களும் ரஜினி குறித்து பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.