ADVERTISEMENT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த அமித்ஷா!

05:53 PM Oct 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் உத்தரகாண்ட் முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்டோரும் சென்றனர்.

ஆய்வுக்குப் பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். 10- க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இரு மலையேறும் குழுக்கள் காணாமல் போன நிலையில், ஒரு குழு கண்டறியப்பட்டுள்ளது. நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மின் உற்பத்தி நிலையங்களில் விரைவில் பணிகள் தொடங்கும்.

மழை வெள்ளத்தில் எந்த சுற்றுலாப் பயணியும் உயிரிழக்கவில்லை; வெள்ளத்தில் சிக்கிய 3,500 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்பாக உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சேதங்கள் கட்டுப்படுத்தப்பட்டன" என்றார்.

முன்னதாக பேசிய உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் தாமி, மூன்று நாட்கள் மழை வெள்ளத்தால் 7000 கோடி ரூபாய் அளவுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT