chennai airport union home minister amitshah

Advertisment

விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸ் ஓட்டல் செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கி நடந்து சென்ற அமித்ஷா.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், பென்ஜமின், பாண்டியராஜன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

chennai airport union home minister amitshah

Advertisment

அதேபோல் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா, சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அமித்ஷாவை வரவேற்றனர்.

chennai airport union home minister amitshah

அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்ட அமித்ஷா, திடீரெனகாரில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் குவிந்திருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறு சிறிது தூரம் நடந்து சென்றார். சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜ.க., அ.தி.மு.க. தொண்டர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார்.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.